Wednesday, May 30, 2012

கடவுள் எங்கு உள்ளார் ?


கடவுள் எல்லா உயிர்களிலும் உள்ளார் ,அவரைக் காண்பது எப்படி ?மனிதர்களாக பிறந்தவர்கள் மட்டும் தான் கடவுளைக் காண முடியும்.அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் .மனிதர்கள் உருவாக்கிய தத்துவங்கள் என்னும் உருவங்களை வழிபாடு செ...யவதாலோ ,கடவுள் பெயரால் வாயில்லாத உயிர்களை பலியிடுவதாலோ, உயிர்பலிக் கொடுத்து புலால் உண்பதாலோ ,கடவுளை நினைத்து ,தவம் தியானம்,யோகம ,செய்வதாலோ ,பொருளைக் கொடுத்து கடவுளை வசப்படுத்தவோ ,முடியாது.

கடவுளைப் பற்றி போதிக்கும் அருளாலர்களை வணங்க்குவதாலோ,ஞானிகளை வணங்க்குவதாலோ மற்ற புற செயகையாலோ கடவுளைக் காணமுடியாது கடவுளைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதாலோ கடவுளைக் காண முடியாது!

நாம் பல பிறவிகள் எடுத்து மனித பிறவிக் கிடைத்துள்ளது.இந்த உலகத்திற்கு வந்ததில் இருந்து பல உயிர்களின் உதவியால் துணையால் ,ஐந்து பூதங்களின் சேர்க்கையால் பிறந்து பிறந்து,இறந்து இறந்து ,இந்த மனிதப் பிறவிக் கிடைத்து உள்ளது ,அப்படி கிடைத்து வந்த இந்த பிறவியை கடவுள் ஏற்றுக் கொள்வாரா ?என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

நாம் என்ன செய்ய வேண்டும் உலகில் உள்ள உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் ,அன்பு,தயவு,கருணை என்னும் செயல்பாட்டில் உயிர்களுக்கு வரும் இடையூறுகளை தவிர்க்க வேண்டும் ,அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும் .ஜீவ காருண்யம் என்றால் என்ன ?அனைவருக்கும் பொதுவாக உண்டாகும் ,பசி ,பிணி,தாகம் .இச்சை எளிமை,பயம் ,கொலை ,துன்பம் போன்ற துயரங்களை போக்கு கின்றவர்கள் கடவுளைக் காண முடியும் ,அவர்களை கடவுள் அன்புடன் ஆசீர்வாதம் செய்து ஏற்றுக் கொள்வார்

கடவுள் ஒருவரே என்ற உண்மையும் ,கடவுள் ஒளியாக உள்ளார் என்ற உண்மையும்,அவருடைய குழந்தைகள் தான் அனைத்தும் என்ற உண்மையும் ,அப்போதுதான் தெரியும் ஒவ்வொரு உயிரின் உள்ளும் உள் ஒளியாக இருப்பதுவே அதாவது {ஆன்மா }வாக இருப்பதுவே கடவுளாகும் .அதற்கு பெயர் ஜீவ ஆன்மாவாகும் ,ஜீவனில் உள்ள ஒளியைப்பார்த்தால் கடவுளின் பரமானமா என்னும் ஒளி தெரியும் .அப்போது இரண்டாக இருந்த ஒளி ஒன்றாகத் தெரியும் அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மபயமாதல் என்பதாகும்.இதுவே கடவுளைக் காணும் எளிய வழியாகும் .ஒழுக்கமும் ஜீவ காருண்யமும்,பர உபகாரமும் ,இருந்தால் கடவுளைக் காண முடியும் .இதுவே உண்மை,உண்மை,உண்மை,சத்தியம்,சத்தியம்,சத்தியம்,

முயற்சி செய்தால் ஞானம் என்னும் ஆன்மீக வழி கிடைக்கும் அருள் சுரக்கும் அதன் வழியாக ஆனந்தம் பெருகும் .

 

No comments:

Post a Comment