Saturday, February 4, 2012

யாழில் தமிழ் – இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

தமிழ் – இந்து பாரம்பரியப் திருமணம் செய்து உள்ளார் ஆங்கிலேய மாப்பிள்ளை ஒருவர்.
இத்திருமணம் யாழ். நீர்வேலியில் கடந்த 27 ஆம் திகதி வெகு சிறப்பாக இடம்பெற்று இருந்தது.
மணமகன் பிரித்தானிய நாட்டு வெள்ளைக்காரன். பெயர் மார்க்.
மணமகள் நீர்வேலியை பூர்வீகமாக கொண்டவரும், பிரித்தானியாவில் பெற்றோருடன் வசித்து வருபவருமான வைத்திய கலாநிதி சிவந்தி.
இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து இருக்கின்றது.
இருவரது வீட்டுக்காரர்களும் தமிழ் – இந்து பாரம்பரியப்படி திருமணத்தை நீர்வேலியில் நடத்துவது என தீர்மானித்தனர்.
தோரணம், மாவிலை, வாழை கட்டி அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மங்கள இசை முழங்க பெற்றோர், பெரியோர், இறை ஆசியுடன் திருமணம் இனிதே நடந்தது.
மார்க்கின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமான ஆங்கிலேயர்கள் திருமண வைபவத்துக்கு வருகை தந்து இருந்தனர்.
, பட்டு வேட்டு, சால்வை, தலைப் பாகை அணிந்து நெற்றி நிறைந்த திருநீற்றுடன் மண மேடையில் அமர்ந்தார் மார்க்.
ஹோமம், கன்னிகா தானம், திருமாங்கல்யதாரணம், சப்தததி முதலாய கிரியைகளுடன் திருமணம் நடத்தப்பட்ட்து.
மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த பக்திப் பரவசத்துடன் தோன்றினர்.
INTRODUCTION OF HINDU MARRIAGE என்கிற ஆங்கில கை நூல் திருமணத்துக்கு வந்திருந்து வெள்ளைக்காரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment