Saturday, February 4, 2012

ஆண்களின் ரசனைக்கு ஏற்ற பெண்கள் !!

என்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம்  இந்த  பெண்கள்தான். என்னம்மாப்  படைத்திருக்கிறான்  இந்த கடவுள்.  அழகாய்  பெண்களையும்  அவர்களுக்காய்  அலையும் ஆண்களையும். ஒரு விதத்தில் கடவுள் பெண்களை இவ்வளவு அழகாயும், ஆண்களை  கவர்ந்திழுக்கும்  வண்ணமும்  படைத்ததற்கு  காரணம் இருக்கிறது.

எப்பொழுதுமே ஆண்கள் பெண்களைப் பார்க்கும் போது ஒரு ஜில் ஜில் உணர்வை கடவுள் பெண்களுக்குள் வைத்துத்தான் இருக்கிறான். பெண்களைப்  பார்த்ததும்  ஒரு  உணர்வு  பத்திக்கணும்.  காமம்  ஒட்டிக்கணும். ஆசை  புட்டுக்கணும். ஆமாங்க அதுதான் கடவுள் பெண்களைப் படைக்கும் பொழுது மனதில் வைத்திருந்த குறிக்கோள்கள்.

காரணம், அப்பொழுதுதான் இனப்பெருக்கத்தில் ஆண்கள் நாட்டம் செலுத்துவார்கள். இனம் பெருக முடியும். அவ்வாறான  ஒரு  ஈர்ப்பும், 'அது'வும் இல்லையென்றால் இந்த வேகமான  உலகில்  எவன்  தான்  இனப்பெருக்கத்திற்காய் உலகத்தை நினைத்து, சந்ததியை நினைத்து பத்து, பதினைந்து நிமிடங்கள் செலவு செய்யப்போகிறான்? இதுதான்  எல்லா  விலங்குகளிலும்  ஆண்களை பெண்கள் ஈர்க்கும் படியாக ஒரு உடல் இச்சை தாகத்தோடு படைத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் சிம்பிள் லாஜிக்.
ஆக, இந்தக்  காரணத்தினாலோ என்னவோ  அவன் (கடவுள்)  பெண்களை ஆண்களுக்கு உசுப்பேத்தும் ஒரு பொருளாகவே படைத்துவிட்டான். இங்கு நம்ம ஆக்கள் பெண்கள் என்றாலே குளு குளு கிளு கிளு என்று திரிகிறார்கள். என்னதான்  சொன்னாலும்  ஆண்களுக்கு  எப்பொழுதும் சந்தோசம் அல்லது ஒரு இன்பத்தைக் கொடுக்கும் ஒரு விடயம் என்றால் அது  பெண்கள்  தான். இதை  ஆண்கள்  அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

பெண்களை இவ்வளவு அழகாய், கவர்ச்சியாய் படைத்துவிட்டால் ஆண்கள் அவர்களை மொய்க்கத்தானே செய்வார்கள். அவர்களை  அடையத்தான் முயற்சிப்பார்கள். இதில் யதார்த்தவியல் முரண்பாடுகள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. அதில் பிழையும் இல்லை. ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்களை ஆண்கள் எப்படி, எங்கு, எதற்காய் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் சரி பிழை இருக்கிறது.

ஒரு பையன் ஒரு பொண்ணைப் பார்த்துவிட்டால் பொண்ணின் தந்தை காய் கூய் என்று வந்துவிடுவார். பொட்டைப் பிள்ளையை பெற்றால் அதை ஆண்பிள்ளை பார்க்காமல் இன்னுமொரு பெண்பிள்ளையா பார்க்கும், ரசிக்கும், ஆசைப்படும்? பெண்களை ஆண்கள் பார்க்கும் பொழுதுதான் பெண்கள் தங்களுள் இருக்கும் பலவகையான உணர்வுகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்கிறது விஞ்ஞான உளவியல்.
பெண்களை பார்த்தாலே, ரூட்டு விட்டாலே பொறுக்கி என்கிறது இந்த சமூகம். எங்களைச் சுற்றி, நம்மை அதிகம் கவரும், நமக்குள் கிளு கிளுப்பை ஏற்படுத்தும் ஒரேயொரு விடயம் இந்த பெண்களாகவே இருக்கும் பொழுது நாம் அதை எப்படி கண்டுக்காமல் இருந்திட முடியும். அப்படி அவர்களை பார்த்தால், சைட் அடித்தால் அந்த பசங்கள் பொறுக்கியா? பெண்கள் எப்பொழுதெல்லாம் சைட் அடிக்கப் படுகிறார்களோ அப்பொழுதுதான் அவர்கள் அழகு, வதனம், அமைப்பு என சகலதும் அம்சம் என உறுதிப்படுத்தப் படுகிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. (ஆய்வு , கீய்வு என்றால் தானே உலகம் நம்ம கருத்தை நம்பும்.. உஷ்... இது நம்ம கருத்து..)

ஆகவே, பசங்க தாராளமாய் பொண்ணுங்கள  ரசிக்கலாம். உங்கள் ரசனை அந்த பெண்களை குஷிப்படுத்துவதாய் இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. மாறாக, எப்பொழுது உங்கள் பார்வை, ரசிப்பு அவர்களை சங்கடப்  படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் பொறுக்கி. அதுவரைக்கும் நீங்கள் நல்லதொரு ரசிகன். அவ்வளவுதான்.
 
 

No comments:

Post a Comment